ரத்த அழுத்தத்தை குறைக்கும் Telmisartan மாத்திரைகள்
உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளல், பக்கவாதம், இதயம் செயலிழப்பு போன்றவற்றிற்கு மருந்தாகிறது Telmisartan Tablet.
Telmisartan எவ்வாறு செயல்படுகிறது?
இது பொதுவாக இரத்த நாளங்களை இறுக்கமாக்கும் இரசாயனத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் இரத்த நாளங்களைத் தளர்த்துகிறது.
இதனால் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, வெவ்வேறு உறுப்புகளுக்கு இரத்தம் சீராகப் பாயவும், இதயம் மிகவும் திறமையாக பம்ப் செய்யவும் அனுமதிக்கிறது.
பக்கவிளைவுகள்
முதுகு வலி
வயிற்றுப்போக்கு
சைனஸ்
அல்சர்
சுவாசக்குழாய் தொற்று
வேறு ஏதேனும் பக்கவிளைவுகள் இருந்தாலும், தொந்தரவு அதிகரித்தாலோ மருத்துவரை உடனடியாக அணுகவும்.
மருத்துவரின் பரிந்துரைப்படி ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது சில நாட்களுக்கு மயக்கம் எதுவும் இருந்தால் ஒரு இடத்தில் அமைதியாக அமரவும் அல்லது சிறிது நேரம் படுத்து உறங்கலாம்.
மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது யூரியா அளவு, பொட்டாசியம் அளவை சீரான இடைவெளியில் பரிசோதித்து பார்க்கவும்.
Telmisartan மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் போது பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கலாம், மற்ற ibuprofen போன்ற anti-inflammatory மருந்துகள் எடுப்பதையும் தவிர்க்கவும்.
ஒரு நாளில் காலை அல்லது மாலை வேளையில் எடுத்துக்கொள்ளவும், ஒவ்வொரு நாளும் ஒரே நேரமாக இருப்பது நல்லது.
மருந்துகள் எடுக்கத் தொடங்கியதும் தீர்வு கிடைத்தாலும், 4 அல்லது 8 வாரங்களிலேயே முழுமையான பலனை பெறலாம்.
ரத்த அழுத்தம் சீரானதாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் மருந்துகள் எடுத்துக்கொள்வதை நிறுத்தக்கூடாது.
திடீரென நிறுத்துவது மறுபடியும் ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும், இது அதீத ரத்த அழுத்தத்தை சரிசெய்யாது என்பதை கவனத்தில் கொள்ளவும், ரத்த அழுத்த அளவை சீரான அளவில் கொண்டு வர உதவும்.
மிக முக்கியமாக ரத்ததத்தில் பொட்டாசியத்தின் அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவ்வப்போது பொட்டாசியத்தின் அளவை பரிசோதிப்பது அவசியம்.
சர்க்கரை நோயாளிகளும் சர்க்கரையின் அளவையும் அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளவும், இன்சுலின் எடுத்துக்கொள்பவராக இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
இதுபோன்று சிறுநீரக நோயாளிகளும் மருத்துவரின் ஆலோசனையை பெற்று அதற்கு ஏற்றாற்போல் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
கல்லீரல் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், கர்ப்பம் தரிக்க திட்டமிட்டுள்ள பெண்கள், ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் Telmisartan மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
குறிப்பு- எந்தவொரு மாத்திரையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆபத்தானதே!!!