சில நொடிகளில் உயிரிழந்த இளைஞர்! சிசிடிவி-யில் தெரியவந்த பகீர் உண்மை
கடந்த நாளில் தெலுங்கானா மாநிலத்தில் ஜன்னாரம் மாவட்டம் மஞ்செரியால் நகருக்கு அருகே உள்ள தபால்பூரில் வாகனச் சோதனை நடைபெற்றது.
அப்போது, அந்த வழியே அதிகவேகத்தில், இரண்டு இளைஞர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்த வனக்காவலர் பலமுறை கையசைத்து வாகனத்தை நிறுத்தச் சொல்லி கூறினார்.
ஆனால், அவர்கள் நிறுத்தாமல் வேகமாகவே வர, சோதனைச் சாவடி கேட்டை வனக்காவலர் தூக்க முயல்கிறார். அதற்குள் அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் சோதனைச் சாவடி தடுப்பு கேட் மீது மோதிச் சென்றது.
இதில், வாகனத்தை ஓட்டி சென்றவர் குனிந்து செல்ல, பின்புறம் அமர்திருந்த சோதனைச் சாவடி கேட் மீது பயங்கரமாக மோதி சம்பவ இடத்திலேயே பலியாகிறார். அப்படி உடன் வந்தவர் பலியான பிறகும் வாகனத்தை ஓட்டியவர் நிற்காமல் தப்பி ஓடி விடுகிறார்.
பதபதைக்கவைக்கும் இந்த சிசிடிவி காட்சி வெளியானதால், கடும் விமர்சனங்கள் எழ வனத்துறையினரே, இளைஞர் பலியானததற்கு புகார் எழுந்ததை அடுத்து தெலங்கானா அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மஞ்சரியால் உதவி காவல் ஆணையர் அகில் மஹாஜன், அந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை செக்போஸ்ட் இயங்கி வருவதாகக் கூறினார்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய அந்த இளைஞர் மற்றும் தப்பித்துகொண்டு பின்னால் இருந்தவரை தாக்க காரணமாக இருந்துள்ளார். தப்பியோடிய அந்த இளைஞரை ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கைது செய்ததாகவும், அவர் மிகவும் மது அருந்தி போதையில் இருந்ததாகவும் காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரின் உடலில் 131 MG அளவுக்கு அல்கஹால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்த விபத்து மற்றும் உயிரிழப்பில் வனக் காவலர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில், வனத்துறைக்கு தவறு இல்லை என்பதை சிசிடிவி வீடியோவைப் பார்க்கும் மக்களே கூறுவது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் களப்பணியில் இருக்கும் தங்களுக்கு ஊக்கமளிப்பதாக காவல்துறை உயரதிகாரி அகில் மகாஜன் தெரிவித்துள்ளார்.
Horrible death. 2 youngsters try to escape cops at a checkpost in Tapalpur village, Jannaram in Mancherial dt. While the biker ducks to avoid being hit, his friend, driving pillion, wasn't so lucky. Got hit on his head leading to death. Parents blame cop. #lockdown #Telangana. pic.twitter.com/iSff3mmkyp
— krishnamurthy (@krishna0302) May 23, 2021