Mobile Recharge திட்டம் 28 நாட்கள் வைத்திருப்பது ஏன்? காரணம் இதோ
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், 30 நாட்கள் இல்லாமல் 28 நாட்கள் வேலிடிட்டி தேதி கொடுப்பதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வைத்திருப்பது ஏன்?
இந்திய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது செல்போன் ரீசார்ஜ் கட்டணம். தாறுமாறக உயர்ந்துள்ளதால் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
நீங்கள் மாதாந்திர திட்டங்களை தேடும் போது 28 நாட்களுக்கு செல்லபடியாகும் திட்டங்களை அதிகமாகவே பார்ப்பீர்கள். ஆனால் ஏன் 30 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் என்று பலருக்கும் யோசனை வந்திருக்கும்.
28 நாட்கள் திட்டத்தினை நீங்கள் பயன்படுத்தும் பயனர்கள் என்றால் ஒரு வருடத்திற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதாவது 12 மாதங்கள் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் நிலையில், மேலும் 29 நாட்களுக்கு கூடுதலாக ஒரு மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த 13வது ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் தான் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக கூறப்படுகின்றது.
இதே போலவே 84 நாட்கள் திட்டத்தினை பயன்படுத்தி வரும் பயனர்கள் வருடத்திற்கு நான்கு முறை ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் மட்டுமே சேவையை பெற முடியும்.
நாம் விலை எவ்வளவு குறைவாக பார்க்கிறோமோ அதற்கு ஏற்ப தொலைதொடர்பு நிறுவனங்கள் பணம் சம்பாதித்து வருகின்றது.
நுகர்வோரின் வேண்டுகோளை ஏற்று TRAI ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) மாதாந்திர திட்டத்தினை வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஆதலால் ஜியோ 30 நாட்கள் திட்டத்தினை ரூ.259க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதே போன்ற மற்ற நிறுவனங்களும் மாதாந்திர திட்டமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |