post office super plan: 19 வயது நிறைவடைந்தவர்களுக்கு 14 லட்சம்! முழு விபரம்
தற்காலத்தில் நாளுக்கு நாள் பணத்தின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. எனவே பணத்தை சேமிப்பதை விட பணத்தை முதலீடு செய்வதே சிறந்த பலனை கொடுக்கும்.
பணத்தை சேமிக்கும் போது அதே பணம் தான் நம்மிடம் இருக்கும் அதற்கு பதிலாக ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதால் இன்னும் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
அந்த வகையில் post office வழங்கும் இந்த பாலிசியில் இணைந்தால், முதிர்வுக்கு பிறகு ரூ.14 லட்சம் நேரடியாக உங்கள் கணக்கில் வைப்பு செய்யப்படும்.
எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிப்பதென்பது இன்றியமையாதது. சேமித்த பணத்திற்கு அதிக வட்டி கொடுப்பதில் தபால்துறை முன்னணி வகிக்கின்றது.
தனது வாடிக்கையாளர்களுக்கு தபால் அலுவலகம் ஏற்கனவே பல முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்களை வழங்கிவரும் நிலையில் வங்கிகள் கொடுக்காதளவு வட்டியை தபால் துறை கொடுக்கின்றது.
கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா
அந்த வகையில் தபால் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ள கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா என்ற இத்திட்டம் பணத்தை திரும்பப் பெறும் திட்டமாகும். இது ஆயுள் காப்பீடு மற்றும் பிற பலன்களையும் கொடுக்கின்றது.
இந்த திட்டத்தின் பெயரிலிருந்தே இது கிராமப்புறங்களில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்பது தெளிவாகின்றது. இந்தத் திட்டத்தில் வெறும் ரூ.95 வைப்பு செய்வதன் மூலம், முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் சுமார் ரூ. 14 லட்சம் பெற முடியும்.
இத்திட்டத்தை ஆரம்பித்த்வர் தற்சமயம் மரணித்தால் பிறகு சில பலன்கள் நிறுத்தப்படும். இந்த திட்டத்தில் முழு உத்தரவாதத் தொகையும் உரிமை கோருபவர்களுக்கு கொடுக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் பணம் திரும்பப் பெறும் திட்டத்தின் சேமிப்புப் பலனையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இத்திட்டம் முதிர்வடைவதற்கு முன்னர் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும் இந்த திட்டத்தின் பலன்களைப் பெற முதலீட்டாளரின் வயது 19 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டியது கட்டாயமானது.
அது மாத்திரமன்றி இத்திட்டம் முதிர்ச்சியின் போது முதலீட்டாளர்களுக்கும் போனஸ் கிடைக்கும். 1995 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான முதலீட்டு காலம் கொண்டது.
முதலீட்டாளர் மரணம் அடைந்தால்
இத்திட்டத்தில் காப்பீட்டுதாரர் இறந்து விட்டால் அவரது வாரிசு அல்லது நாமினிக்கு மொத்த உத்தரவாதத் தொகையும் போனஸுடன் சேர்த்து செலுத்தப்படும்.
இந்த திட்டத்திலிருந்து முதிர்வுக்கு முன்பாகவும் பணத்தை பெறலாம். அத்துடன் முதிர்ச்சியின் போது முதலீட்டாளர்களுக்கு இந்த பாலிசியின் வாயிலாக போனஸ் கிடைக்கும்.
முதலீட்டாளர் தனது 25 வயதில் முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் பாலிசி காலம். மொத்த உத்தரவாதத் தொகை ரூ. 7 லட்சம். தினமும் ரூ. 95 வீதம் 2853 ரூபாய் மாத தவனை செலுத்த வேண்டும்.
இதில் ஆண்டுக்கு மொத்தமாக ரூ. 32,735 செலுத்த வேண்டும். இதன் மூலமாக முதலீட்டாளர் முதிர்ச்சியின் போது சுமார் ரூ. 14 லட்சத்தை பெறலாம்.
மூன்று மாத அடிப்படையில் பார்த்தால், இதற்கு ரூ.8,850 டெபாசிட் செய்ய வேண்டும், அதே சமயம் 6 மாதங்களுக்கு ரூ.17,100 டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்தால், முதிர்வுக்கு பின்னர் ரூ.14 லட்சம் நேரடியாக உங்கள் கணக்கில் வைப்பு செய்யப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |