பற்களில் இருந்து வரும் இரத்த வடிதலை குணமாக்க சில டிப்ஸ்- செய்து பாருங்க
பொதுவாக தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறை காரணமாக ஏகப்பட்ட ஆரோக்கிய குறைபாடு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
உடம்பில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் பற்களின் ஆரோக்கியத்தில் எப்போதும் ஒரு கவனம் இருப்பது சிறந்தது.
பற்களில் ஏதேனும் பிரச்சனை வரும் முன்பே வீட்டிலேயே கவனித்துக் கொள்ள வேண்டும்.
பற்களில் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் அது தாங்க முடியாத வலியை கொடுக்கும்.
அந்த வகையில், பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?
1. முதலில் முறையாக பல் துலக்க கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 2 நிமிடங்களுக்கு டூத்பிரஷை வட்ட இயக்கத்தில் மெதுவாக தேய்க்க வேண்டும். முறையாக பல் துலக்காவிட்டால் துர்நாற்றம், ஈறுகளில் பிரச்சினை, பற்சொத்தை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. தினமும் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். பல் துலக்கும் போது நாக்கையும் சேர்த்து சுத்தம் செய்வது அவசியம். சுத்தம் செய்யாத போது வாய் துர்நாற்றம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3. தினமும் கண்டிப்பாக Mouth wash செய்ய வேண்டும். இது பற்களை வெண்மையாக்கி, வாயில் உள்ள பாக்டீரியாக்களை வெளியேற்றும். அத்துடன் ஈறு அழற்சியை தடுக்கிறது.
4. அதிகமான தண்ணீர் குடிப்பது உடலுக்கும் பற்களுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. சாப்பிட்ட பின்னர் போதுமான அளவு நீர் குடிப்பது வாயைக் கழுவி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதனால் உமிழ்நீர் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.
5. ஈறுகளில் பிரச்சினை வரும் போது தக்காளி, கொய்யா மற்றும் ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த புதிய பழங்களை சாப்பிடுவது நல்லது. பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களை வழங்குகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |