ரசத்தில் விஷம் கலந்து மொத்த குடும்பத்தையே கொன்ற பெண்: விசாரணையில் அதிர்ச்சி
இந்தியாவில் ரசத்தில் விஷம் கலந்து கொடுத்து மொத்த குடும்பத்தையே கொலை செய்ய முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரபிரதேசத்தின் ஹோலகாரில் உள்ள பாகுதிபூர் கதனா கிராமத்தை சேர்ந்த 15 வயதான பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.
அப்பெண்ணுக்கு சகோதர, சகோதரிகள் உள்ள நிலையில், அவரை வீட்டு வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் தன்னுடைய குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்த பெண், அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்டார்.
இதன்படி வீட்டில் சமைத்து வைத்திருந்த ரசத்தில் விஷத்தை கலந்து விட்டார், இந்த உணவை அனைவருக்கும் பரிமாறிவிட்டு தான் மட்டும் சாப்பிடாமல் விட்டுவிட்டார்.
இதனால் அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி பெண்ணின் சகோதரர் மற்றும் சகோதரி உயிரிழந்துவிட, தாய் அளித்த புகாரின் பேரில் இளம்பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.