viral video: வகுப்பறையில் தலைக்கு எண்ணெய் தேய்த்த ஆசிரியை! விளாசி தள்ளும் நெட்டிசன்கள்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் தனது தலைக்கு எண்ணெய் தேய்த்து அலங்கரித்த ஆசிரியர் தொடர்பான காணொளியொன்று வெளியாகி இணையதில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷேர் மாவட்டம் முந்தக்கேடாவில் உள்ள பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த காணொளியில் , மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது ஆசிரியை தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவியதுடன், கைபேசியில் கிளாசிக்கல் இசையை ஓடவிட்டு இசை கேட்டுக்கொண்டு இருக்கின்றார்.
இது கல்வித்துறையின் கடுமையான விமர்சனத்தையும், பொதுமக்களின் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும், பாடசாலைக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆசிரியை மோசமாக நடந்து கொண்டதுடன், கம்பியால் அடித்ததாகவும் குறித்த ஆரம்பப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை சங்கீதா மீது புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி டாக்டர் லஷ்மிகாந்த் பாண்டே, இந்த சம்பவத்தை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்து கொண்டு, தனிப்பட்ட விசாரணை அலுவலரை நியமித்து விசாரணையை ஆரம்பித்துள்ளார். இதற்குமுன்னர் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#उत्तरप्रदेश
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) July 20, 2025
प्रिंसिपल मैडम कौन से तेल से चंपी कर रही हैं??🤔
👉🏾 लाउडस्पीकर में क्लासिकल सांग का आनंद लेते हुए। सिंगार दानी से तेल निकाल कर सर में डाल-डाल कर मानसिक टेंशन दूर कर रही हैं।
👉🏾 सहायक अध्यापक द्वारा वीडियो बनाये जाने पर छात्र छात्राएं मुस्कुराते हुए इशारा कर रहे… pic.twitter.com/UW68wHqfhS
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
