உப்புசதத்தை நொடிப்பொழுதில் விரட்டியடிக்கும் டீ! எத்தனை டம்பளர் குடிக்கணும் தெரியுமா?
பொதுவாக பலர் நன்றாக சாப்பிட்டு முடித்த பின்னர் வயிற்றில் என்ன அசைவும் இருக்காது.
இதனை தொடர்ந்து நன்றாக படுத்து உறங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும் இதனையே நாம் வயிற்று உப்புசம் என்று அழைக்கப்படுகிறோம்.
வயிற்றை அசைக்க முடியாது என்பதால் வயிற்றை அசைக்க முற்ப்பட்டால் வயிற்று பகுதியில் ஒரு வலி ஏற்படும். இதனால் சிலருக்கு கொஞ்சம் நேரம் அசௌகரியமாக இருக்கும்.
இதனால் வயிற்று பகுதியில் செரிமான அமைப்பில் வாயுக்கள் அதிகப்படியாக குவிக்கின்ற காரணத்தால் வயிற்று உப்புசம் உண்டாகிறது.
அந்த வகையில் உப்புசம் பற்றி நாம் தெரிந்து கொள்ளாத பல விடயங்களை தொடர்ந்து நாம் தெரிந்து கொள்வோம்.
வயிற்று உப்புசம் ஏற்பட காரணம்
பொதுவாக உப்புசம் எனப்படுவது பல காரணங்களினால் ஏற்படுகின்றன. அதாவது, அதிகப்படியாக உணவு சாப்பிடுவது, விரைவாக உணவை சாப்பிடுவது, சரியாக மெல்லாமல் உணவை அப்படியே விழுங்குவது உள்ளிட்ட காரணங்களை கூறலாம்.
மேலும் வயிற்றிலிருந்து வெளியேறும் வாயு இதனால் அடைப்பட்டு நிற்கும். இப்படியான ஒரு நிலையில் ஏற்படுவது தான் உப்புசம் என அழைக்கப்படுகின்றது.
நிவாரணம் பெற என்ன செய்யலாம்?
1. அளவிற்கு அதிகப்படியான உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, அளவான உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
2. இஞ்சி, புதினா மற்றும் வெந்தயம் கொண்டு தயாரிக்கப்படும் டீ-புலோட் டீ என அழைக்கப்படும் டீயை தயாரித்து குடித்தால் உப்புசம் குறையும்.
3. இஞ்சி தண்ணீர் குடிக்கலாம் ஏனெனின் ஜின்ஜிபெயின் என்ற நொதியானது உணவில் காணப்படும் புரதத்தை உடைத்து செரிமானத்தை எளிதாகிறது.
நிவாரணம் தரும் டீயை எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- இஞ்சி - சிறிய துண்டு
- வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
- புதினா - தேவையானளவு
- தண்ணீர் - தேவையானளவு
- எலுமிச்சை சாறு - 2 துளிகள்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க விட வேண்டும்.
- அதில் இஞ்சி, புதினா இலைகள், வெந்தய விதைகள் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அதனை இறக்கி வடிக்கட்டி இறக்க வேண்டும்.
-
பின்னர் அதனை ஒரு கிளாஸில் நேநீரை ஊற்றி ஓரிரு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் பிளாக் சால்ட் கலந்து வெதுவெதுப்பாக பருகலாம்.