இந்தியாவில் யாழ்பாணத்து பிட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் - 1 லட்சம் பணத்தை வென்ற வாகீசன்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் யாழ்பாணத்தை சேர்ந்த வாகீசன் பிட்டு சமைத்து 1 லட்சம் வெற்றி பெற்றுள்ளார்.
டாப்பு குக்கு டூப்பு குக்கு
பிரபல டிவி நிகழடச்சியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர்,நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் கடந்த வாரம் Trational சுற்று இடம்பெற்றது. ,தில் போட்டியாளர்கள் பாரம்பரிய தங்களுக்கு நெருங்கிய உணவுகளை சமைத்தார்கள். இதில் இலங்கையை சேர்ந்த வாகீசன் பிட்டும் சிக்கன் கறி மற்றும் இடித்த சம்பல் செய்தார்.
1 லட்சம் வெற்றி பெற்ற வாகீசன்
கடந்த வாரம் டூப்பு குக்கு டாப்பு குக்கில் வாகீசன் 1 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றார். இது இலங்கையின் யாழ்ப்பாண பாரம்பரிய உணவாகும்.
இது பாரம்பரிய சுற்று என்பதால் வாகீசன் இதை செய்து அந்த உணவுடன் தனக்கு இருக்கும் இணைப்பையும் கூறி இருந்தார். இதில் அவர் கூறியது பொதுவாக யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு பிட்டு தான்.
நான் பள்ளி செல்லும் காலங்களில் என் அம்மா பிட்டும் இறைச்சி கறியும் தான் போட்டு பிரட்டி தருவார். அம்மாவிற்கும் எனக்கும் இந்த பிட்டு உணவின் மூலம் நிறைய நினைவுகள் உள்ளது.
அதிலும் முதல் முதலாக பிட்டின் மூலம் தான் என்னுடைய பாடல் பிரபலமானது எனவும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து செஃப் வெங்கடேஷ் பட் குறைகள் குறைவாகவும் நிறைகள் நிறைவாகவும் இருந்தது வாகிசனுடைய எணவில் தான் அவருடைய பாரம்பரிய உணவின் சுவையும் அருமை என வெற்றியாளராக அறிவித்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |