TCDC: கர்ணன் வேடத்தில் மிரளவிட்ட மோனிஷா! அரங்கமே கண்கலங்கிய தருணம்
டாப் குக் டூப் குக் மோனிஷா கர்ணன் வேடத்தில் தனது மெய்சிலிக்க வைக்கும் நடிப்பு திறமையால் நாட்டுபுற கலையில் முக்கியத்துவத்தை உலகறிய வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
டாப் குக் டூப் குக்
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு.

இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை தற்போது வெற்றிகரமாக கடந்து வருகின்றது.
சன் டிவி, முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸுடன் இணைந்து, இந்த நிகழ்சியை வழங்கி வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் 17, 2025 அன்று ஆரம்பமான இந்நிகழ்சியில், செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இதில், டூப் குக்காக பங்கேற்று வரும் மோனிஷா கர்ணன் வேடத்தில் தனது மெய்சிலிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்திய காணொளி தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |