Taylor Swift: பாப் இசைப் பாடகியின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? இவரின் பூனைக்கே 800 கோடி சொத்து இருக்காம்!
உலக புகழ்பெற்ற அமெரிக்க பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) உலகின் Billionaires பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் 1000 மில்லியன் டொலர்களைத் தாண்டிய பணக்காரர்களின் பட்டியலில் (Billionaires List 2024) குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு
தானே பாடல்களை எழுதிப்பாடும் டெய்லர் ஸ்விஃப்ட் தனது இசை ஆல்பங்களின் அடிப்படையில் பில்லியனர் ஆன முதல் கலைஞராக அறியப்படுகின்றார்.
போர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் சொத்து மதிப்பு சுமார் $1.1 பில்லியன் என குறிப்பிடப்படுகின்றது. இது இந்திய மதிப்பில் சுமார் 9000 கோடி ரூபாய்களுக்கு மேல்.
கடந்த காலத்தில், பாப் பாடகர்களான Rihanna மற்றும் Jay-Z கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்தனர், ஆனால் அவர்கள் தங்கள் ஃபேஷன் பிராண்டுகள் மூலம் தான் அந்தளவான வருமானத்தை பெற்றார்கள்.
34 வயதான டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு New York, Beverly Hills, Nashville, Rhode Island ஆகிய இடங்களில் ஆடம்பர வீடுகளும் இருக்கின்றன.
பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் வளர்ப்பு பூனையான ஒலிவியா பென்ஸனின் சொத்து மதிப்பு 97 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில், 800 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். ஒலிவியா பென்ஸனின் என்ற இந்த பூனை தான் உலகின் மூன்றாவது வசதியான செல்லப்பிராணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |