LIC policy: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்தால் ரூ.31 லட்சமா? முழு விபரம் இதோ!
இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை வழங்குகிறது.
இது சிறிய சேமிப்பின் மூலமாக பெரிய நிதி திரட்ட துணைப்புரிகின்றது.
Life Insurance Corporation of India: வெறும் 151 ரூபாய் முதலீடு செய்து, 31 லட்சம் வரை சேமிக்க முடியும்.அப்படிப்பட்ட சூப்பர் திட்டத்தை தான் எல்ஐசி வழங்குகிறது.
எல்ஐசியின் இந்த சிறந்த திட்டத்தின் மூலம் அதாவது ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பலரின் கனவுகளை நனவாக்கி வருகின்றது.இந்தத் திட்டம் தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களுக்காக அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் ஒருவர் தினசரி 151 ரூபாய் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒரே நேரத்தில் 31 லட்சம் ரூபாயை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.
எல்ஐசி திட்டங்களில் கன்யாடன் பாலிசி என்பது ஒரு தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பின் இரட்டிப்பு பலனை கொடுக்கின்றது.
இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் வளர்ந்து வரும் பெண் குழந்தையுடன், அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான நிதியும் வளர்ச்சியடைவதால் பெண்குழந்தைகளின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களில் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதில் பெற்றோருக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
முதலீட்டில் 31 லட்சம் பெறலாமா?
எல்ஐசியின் கன்யாடன் பாலிசி திட்டத்தில் இணைய விரும்பினால் அவர் குறைந்தபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும் அத்துடன் குழந்தைக்கு குறைந்தபட்சம் 1பூர்தியாகியிருக்க வேண்டும்.
கன்யாடன் பாலிசி திட்டம் மொத்தமாக 25 ஆண்டுகளை கொண்டது. இதில் 22 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுதினால் போதும் மீதி 3 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தேவையான ஆவணங்கள்
பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்.
பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் அடையாளச் சான்று (பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள்).
இந்த காப்பீட்டு திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 151 செலுத்த வேண்டும் மற்றும் ரூ. 4,530 மாதாந்தோறும் வைப்பு செய்ய வேண்டும். ஒருவரின் சம்பளம் ரூ.15,000 என்றால் அவர் தனது மகளின் பெயரில் கன்யாதன் பாலிசி எடுக்க முடியும்.
தொடர்ந்து 22 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் 25 வருடங்கள் முடிவடைந்ததும் அவருக்கு ரூ. 31 லட்சம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் நிதி ரீதியிலான பாதுகாப்பபை உறுதி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |