Sweet Tamarind Chutney: நாவூரும் சுவையில் இனிப்பு புளி சட்னி... இனி ஸ்நாக்ஸ்க்கு இதை செய்ங்க!
பொதுவாகவே எவ்வளவு தான் தான் கட்டுப்படுத்தினாலும் நம்மால் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த முடிவதில்லை.
குறிப்பாக ஸ்நாக்ஸ் சாப்பிடும் போது அதற்கு தொட்டுக்கொள்ள சாஸ் பாட்டிலையும் கூடவே வைத்துக்கொள்ளும் வழக்கம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் இருக்கின்றது.
ஆனால் கடைகளில் வாங்கும் சாஸ்களில் பெருமளில் ரசாயனங்களும், செயற்கை நிறமூட்டிகளும் கலக்கப்படுகின்றது. இது குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த பிரச்சிகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? இனி ஸ்நாக்ஸ்க்கு தொட்டுக்கொள்ள சாஸ் வாங்காமல், அசத்தல் சுவையில் இந்த இனிப்பு புளி சட்னியை செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
எப்படி எளிமையாக வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யவதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெல்லம் – கொதிக்கும் போது வேகமாக உருகுவதால் நொறுக்கப்பட்ட வெல்லத்தைப் பயன்படுத்துவது சிறப்பு.
புளி – புளியை வெந்நீரில் ஊறவைத்து, நன்றாக நசுக்கி, சில நிமிடங்கள் ஊறவைத்து, வடிகட்டியது.
சிவப்பு மிளகாய் தூள் – காரத்திற்கு தேவையான அளவு உங்கள் மசாலா விருப்பத்தைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேர்க்கலாம்.
சீரகத் தூள் – வறுத்த சீரகத் தூள் பயன்படுத்துவது கூடுதல் சுவையை கொடுக்கும்.
செய்முறை
முதலில் புளியை ஊறவைத்து வடிகட்டிய புளி தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து அதனுடன் ¼ கப் வெந்நீர் சேர்த்து, ஒரு கரண்டியால் நன்றாகப் கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அந்த பாத்திரத்ரத்தை அடுப்பில் வைத்து,அதில் சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த கலவை சற்று கெட்டியாகும் வரை சுமார் 10 நிமிடங்கள் நன்றா கொதிக்க வைக்க வேண்டும்.
ஒட்டும் தன்மையுடனும் தடிமனாக மாறும் பதத்தில், அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு உலோக வடிகட்டியைப் பயன்படுத்தி வடிகட்டி, சட்னியை குளிர்வித்து சேமித்து வைத்து பயன்படுத்தலாம். இது நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |