நாவூற வைக்கும் இறால் 65... ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் எப்படி செய்வது?
அசைவ பிரியர்களின் முதல் தெரிவு என்னவெனில் இறால் ஆகும். ஆம் கடல் உணவுகள் என்றால் அசைவப்பிரியர்களின் கொள்ளை பிரியம். ஹொட்டல் ஸ்டைலில் இறால் 65 எவ்வாறு தயார் செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்யப்பட்ட இறால் - 250 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து மஞ்சள் தூள் கொண்டு கழுவவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மசாலா தூள்கள் மற்றும் மாவு இவற்றினை சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையில் இறால் துண்டுகளை சேர்த்து 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை போட்டு நன்கு புரட்டி வேக வைத்து எடுத்து அதில் பொரித்த கறிவேப்பிலையை மேலே தூவி அதன் மீது எலுமிச்சை சாறு சிறிவு விட்டு சாப்பிடவும். தற்போது ரெஸ்டாரண்ட் ஸ்டைல் இறால் 65 தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |