உருளைக்கிழங்கு இறால் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே அசைவ உணவு பிரியர்களின் பட்டியலில் இறால் நிச்சயம் முக்கிய இடம் வகிக்கின்றது.
அதுபோல் அனைவருக்குமே மிகவும் பிடித்த சைவ உணவு என்றால் நிச்சயம் உருளைக்கிழங்காகத்தான் இருக்கும்.
இவை இரண்டும் சேர்ந்தால் சுவை எப்படியிருக்குமத் என சொல்லவா வேண்டும். இறால் மற்றும் உருளைக்கிழங்கு வைத்து சுவையான உருளைக்கிழங்கு இறால் மசாலா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மரினேட் செய்ய தேவையானவை
இறால் - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
உப்பு - சிறிதளவு
ஏனைய பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 6 பல்
இஞ்சி துண்டு - 1
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தே.கரண்டி
சீரக தூள் - 1/2 தே.கரண்டி
இலவங்கப்பட்டை தூள் - 1/4 தே.கரண்டி
சர்க்கரை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இறால், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடங்களுக்கு மூடி ஊறவைக்க வேண்டும்.
அதன பின் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து சிறு துண்டுகளாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அளவு சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மரினேட் செய்த இறாலைச் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பி்ன்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி துண்டு மற்றும் பூண்டு பல் சேர்த்து கொரகொரவென்ற பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் துருவிய தேங்காய், கொத்தமல்லி தூள் மற்றும் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதிகமான தீயில் வைத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து உடனே அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வறுத்த இறால் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வேகவைக்க வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வரை கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு பதத்துக்கு வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் மணமணக்கும் இறால் உருளைக்கிழங்கு மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |