வெறும் 10 நிமிடத்தில் அசத்தல் சுவையில் குஸ்கா செய்யணுமா? இப்படி செய்து பாருங்க
பொதுவாகவே வீட்டு சமையல் என்றால் மதியம் சாதம், சாம்பார், கூட்டு, பொரியல் என சமைப்பது தான் வழக்கம்.
ஆனால் வீட்டில் காய்கறி இல்லாத போதும், மதியம் சமையல் செய்ய லேட் ஆகிவிட்டாலும் வெறும் 10 நிமிடங்களில் அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் குஸ்காவை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 இன்ச்
தக்காளி - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
கல்பாசி - சிறிதளவு
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
புதினா -1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 1/2 தே.கரண்டி
மல்லித் தூள் - 3/4 தே.கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1 1/2 தே.கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
எலுமிச்சை - பாதி
பாசுமதி அரிசி - 1 கப்
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அறைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாசுமதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து நீரை ஊற்றி 10 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு நன்கு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக 2 நிமிடங்கள் வரையில் வதக்கி, அதனுடன் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகாய் தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்றாக விட்டு கிளறி, தயிரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்பு 1 1/2 கப் நீரை ஊற்றி, அதன் பின் பாதியளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்ததும் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கினால், அவ்வளவு தான் சுவையான குஸ்கா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |