சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் பச்சை மிளகாய் தொக்கு... எப்படி செய்வது?
பொதுவாகவே பச்சை மிளகாய் என்றால் பெரும்பாலானவர்களுக்கு அதன் காரத்தன்மை தான் நினைவிற்கு வரும்.
அதனால் பலரும் அதன் சத்துக்கள் தெரியாமலேயே அதனை புறக்கணித்து விடுகின்றோம். குழம்பில் சேர்க்கும் பச்சை மிளகாயையும் உணவில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுட்டு சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.
ஆனால் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இது பெரிதும் துணைப்புரிகின்றது.
பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
மேலும் இது ஒரு இயற்கை வலி நிவாரணியான இருகின்றது. அதிக வேலைப்பளுவால் ஏற்படும் உடல் வலியை போக்குவதற்கு தினசரி உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொண்டாலே போதும்.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட பச்சை மிளகாயை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு பச்சை மிளகாய் தொக்கு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் - 15
சின்ன வெங்காயம் - 10-12
இஞ்சி - 2 இன்ச் அளவு
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் - ½ தே.கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு - ¼ தே.கரண்டி
வெந்தயம் - ¼ தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - ¼ தே.கரண்டி
கடலைப்பருப்பு - ¼ தே.கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
செய்முறை
முதலில் பச்சை மிளகாயை நன்றாக சுத்தம் செய்து காம்புகளை நீக்கி நன்றாக உலர வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் மிளகாய்களை நீளவாக்கில் நடுவில் மட்டும் கிரீ தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் நன்றாக ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.
பின்னர் அதனுடன் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கீரி வைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் கருவேப்பிலை சேர்த்து சத்தம் அடங்கும் வரை விடவும். - பின் அதில் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அதனையடுத்து நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரையில் நன்றாக வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் புளி கரைசலை சேர்த்து கலந்து விட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியில் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமாக சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பச்சை மிளகாய் தொக்கு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |