தாபா பாணியில் அசத்தல் முட்டை குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளின் பட்டியலில் முட்டை நிச்சயம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
புரத்ததின் மிகச்சிறந்த மூலமாக காணப்படும் முட்டை சரும ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரையில் பெரிதும் துணைப்புரிகின்றது.
இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த முட்டையை கொண்டு வழக்கம் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக தாபா பாணியில் அட்டகாசமான முட்டை குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
வேகவைத்த முட்டை 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
சீரகம் - 1 தே.கரண்டி
தயிர் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
மல்லித்தூள் - 1 தே.கரண்டி
காஷ்மீர் மிளகாய்தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
சீரகத் தூள் - அரை தே.கரண்டி
மிளகுத்தூள் - 1 தே.கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகுத்தூள் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளியை அரைத்து அதில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, தயிரையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தியையும் போட்டு , 1 ½ கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பச்சை மிளகாயை கீறி சேர்த்து சிறிது கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வேகவைத்த முட்டைகளை அதில் போட்டு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, முட்டையின் மேற்பரப்பின் நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வேக வைத்த கிரேவியில் வதக்கி எடுத்த முட்டைகளை சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை இதில் போட்டு இறக்கினால் இவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் தாபா பாணியில் முட்டை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |