காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி?

Healthy Food Recipes
By Manchu Jul 16, 2026 05:45 PM GMT
Report

நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்...

மீன் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது, மீனில் பல சுவையான மீன் வகைகள் உண்டு. அதிலும் சிறியதாக இருக்கும் நெத்திலி மீன் என்றால் சொல்லவா வேண்டும், சிறியதாக இருந்தாலும் அதன் சுவை அலாதி தான். நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்.

அந்தவகையில் நெத்திலி மீன் கொண்டு செய்யப்படும் தொக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த நெத்திலி மீன் தொக்கை சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். 

காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி? | Tasty Nethili Meen Thokku Recipe In Tamil

தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு பற்கள் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க தேவையானவை :

சின்ன வெங்காயம் - 20 முதல் 25
பழுத்த தக்காளி - 2
 பச்சை மிளகாய் - 2
பூண்டு பற்கள் - 10
 மிளகு - 1 டீஸ்பூன் 

காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி? | Tasty Nethili Meen Thokku Recipe In Tamil

செய்முறை

அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், பழுத்த தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அடுப்பில் கடாய் வைத்து 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வெந்தயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கி பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

மசாலாவில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிய பின்னர் அதில் புளி கரைசலை ஊற்றி கிளறி சமைக்கவும்.

காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி? | Tasty Nethili Meen Thokku Recipe In Tamil

மசாலாக்கள் கெட்டியாக தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் நன்றாக அலசிய நெத்திலி மீனை சேர்த்து கலந்து வேகவிடவும். பின்னர் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடாயை மூடி வைத்து 5-8 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.

மீன் நன்கு மென்மையாக வெந்து தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீயில் பிரட்டி எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான நெத்திலி மீன் தொக்கு சாப்பிட ரெடி...

மீல் மேக்கரில் சுவையான சுக்கா... மட்டன், சிக்கனே தோற்றுப்போயிடுமாம்

மீல் மேக்கரில் சுவையான சுக்கா... மட்டன், சிக்கனே தோற்றுப்போயிடுமாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US