மீல் மேக்கரில் சுவையான சுக்கா... மட்டன், சிக்கனே தோற்றுப்போயிடுமாம்
சப்பாத்தி, சாதம் இவற்றிற்கு ஏற்ற மீல் மேக்கர் சுக்கா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மனிதர்களின் தசை வளர்ச்சிக்கு புரதச்சத்து மிக முக்கியம் ஆகும். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு முட்டை, மீன் இவற்றின் மூலம் புரதச்சத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால் சைவம் சாப்பிடுபவர்கள் பனீர், மீல் மேக்கர் இவற்றில் தான் புரதச்சத்தை பெறுகின்றனர். சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மீல் மேக்கர் காணப்படுகின்றது.
அந்த வகையில் மீல் மேக்கரில் சுக்கா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மசாலா அரைக்க
1 - பெரிய வெங்காயம் (நறுக்கியது)1 - பெரிய தக்காளி (நறுக்கியது)
1 ஸ்பூன் - எண்ணெய்
½ ஸ்பூன் - சோம்பு
5 பூண்டு - பல்
சுக்கா செய்ய
1 கப் - சோயா
1 - பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
2 ஸ்பூன் - எண்ணெய்
1 ஸ்பூன் - காஷ்மீரி மிளகாய் தூள்
1 ஸ்பூன் - மல்லித் தூள்
’
¼ ஸ்பூன் - மஞ்சள் தூள்
½ ஸ்பூன் - கரம் மசாலா தூள்
¼ ஸ்பூன் - மிளகுத் தூள்
சிறிது - கறிவேப்பிலை
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
தேவையான அளவு - உப்பு

செய்முறை
மீல் மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு வடிகட்டி, வெறும் தண்ணீரில் 2 தடவை கழுவி பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு சோயாவையும் 2 அல்லது 3 துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து, அதனுடன் சோம்பு போடவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி பூண்டு பற்களை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்க வேண்டும்.
வதக்கிய கலவையை ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி இதனுடன் அரைத்து வைத்த விழுதையும் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து சில நிமிடம் கிளறிய பின்பு சோயா துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக மிளகுத்தூள் தூவி சிறிது கிளறிவிட்டு இறக்கினால் சோயா சுக்கா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |