இளமையை நீடிக்க உதவும் பீட்ரூட் பச்சடி! இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது
பொதுவாகவே எல்லா காய்கறிகளை போல் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிபரிப்பதிலும் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பீட்ரூட் என்றாலே இனிக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த காய்கறியை அனைவருக்கும் பிடிக்கும்.

இது ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. பீட்ரூட் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்துவதற்கும் பீட்ரூட் துணைப்புரிகின்றது.
குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது. நீண்ட காலத்துக்கு இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் தினசரி உணவில் பீட்ரூட்டை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட பீட்ரூட்டை கொண்டு அசத்தல் சுலையில் பச்சடி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1 (துருவியது)
தண்ணீர் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1 கப்

அரைப்பதற்கு தேவையானவை
தேங்காய் - 2 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
தண்ணீர் - சிறிதளவு

அரைப்பதற்கு தேவையானவை
தேங்காய் - 2 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
தண்ணீர் - சிறிதளவு

தாளிப்பதற்கு தேவையானவை
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
முதலில் பீட்ரூட்டை கழுவி தோலை நீக்கிவிட்டு, துருவி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் துருவிய பீட்ரூட்டையும் சேர்த்து, அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, மூடி வைத்து 5-8 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பீட்ரூட்டுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 2-3 நிமிடங்களுக்கு மூடி வைத்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் 1 கப் தயிரை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
இறுதியாக ஒரு வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பச்சடியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் பீட்ரூட் பச்சடி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |