சப்பாத்திக்கு பக்காவா பொருந்தும் பீன்ஸ் மசாலா... எப்படி செய்வது?
பொதுவாக சிக்கன், மட்டன், பால், முட்டையில் எந்த அளவுக்கு புரோட்டின் இருக்கிறதோ அதே அளவு புரோட்டின் பீன்ஸலும் இருக்கிறது என்று உணவு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் பெரும்பாலானவர்கள் தாவர புரதங்களை தவிர்த்துவிடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் சைவ உணவுகளின் சுவை பலருக்கும் பிடிப்பது கிடையாது.
தேசை மற்றும் சம்பாத்திக்கு பக்காவாக பொருந்தும் பீன்ஸ் மசாலாவை வீ்ட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையானவை
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
பீன்ஸ் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
தண்ணீர் - சிறிதளவு
தயிர் - 5 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து, தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து, நன்றாக பச்சை வாசனை போகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக பச்சை வாசனை போகம் வரையில் மிதமான தீயில் வைத்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து துண்டுகளாக்கி வைத்துள்ள பீன்ஸை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேகவிட வேண்டும்.
10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, தயிரை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறுதியில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், இவ்வளவு தான் சுவையான பீன்ஸ் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |