பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்... இப்படி செய்து பாருங்க... சுவை அள்ளும்!
பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகின்றது.
எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுவதுடன் நுரையீரல் தொற்றுக்களை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை , நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்துவது சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும் இதில் செறிவாக காணப்படுகின்றது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த எலுமிச்சையில் கோடைகாத்துக்கு ஏற்ற வகையில் நாவூரும் சுவையில் எவ்வாறு எலுமிச்சை சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 2 கப்
எலுமிச்சை சாறுக்கு - இரண்டு பழம்
வேர்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
பச்சை மிளகாய் - 1
வரமிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து பொரியவிட்டு உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வவரையில் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் பொடியாக உடைத்த முந்திரி, தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கிள்ளிய வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு பிழிந்தது வைத்துள்ள எலுமிச்சை சாறை இதில் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.(குறிப்பு : எலுமிச்சை சாறு சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது)
அடுத்து உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தில் இதை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால் மணமணக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த எலுமிச்சை சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |