பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் எண்ணெய்- எப்படி செய்றாங்க தெரியுமா?
தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அதிகமானோர் எதிர்க் கொள்ளும் பிரச்சினை தான் பொடுகு.
தலையை சரியாக பராமரிக்காவிட்டால் பொடுகு பிரச்சினை ஏற்படும். இது நிரந்தரமாக இல்லாமலாக்க முடியாது. மாறாக கட்டுக்குள் வைக்கலாம்.
நம்முடைய உச்சந்தலையில் உள்ள சருமத்தில் வெள்ளை செதில்கள் போன்ற உதிரும். இந்த வகை பொடுகு தான் அதிகமானோரை பாதிக்கிறது. இதனை சரிச் செய்ய ஆங்கில மருத்துவத்தில் பல வழிகள் இருந்தாலும், அவை நிரந்தரமாக தீர்வு தரும் என்பது சந்தேகம் தான்.
பொடுகு மற்றும் தலைமுடி பிரச்சினைக்கு கை வைத்தியங்கள் நிரந்தர தீர்வை கொடுக்கிறது. பெரிதாக செலவு செய்யாமல் வீட்டிலுள்ள சிலப் பொருட்களை மாத்திரம் கொண்டு தலை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வை பெறலாம்.
ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எண்ணெய் சுரப்பிகளின் காரணமாக இளம் வயதில் பொடுகு அதிகமாக உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
ஏனென்றால் ஆண்கள் பெரிதாக தலைமுடியை சுத்தம் செய்யமாட்டார்கள். அத்துடன் ரசாயனங்களின் பயன்பாடு நிறைய ஆண்களிடம் இருக்கிறது. இதுவும் பொடுகு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பாக அமைகிறது.
அந்த வகையில், பொடுகு தொல்லை அவஸ்தைப்படுபவர்களுக்கு என்ன தீர்வு கொடுக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பொடுகு வருவதற்கான காரணம்
1 . மலாசீசியா
- மலாசீசியா பெரும்பாலான பெரியவர்களின் உச்சந்தலையில் இயற்கையாகவே வாழும் ஈஸ்ட் போன்ற பூஞ்சையாகும். இந்த தொற்று குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே ஏற்படுகிறது. ஆனால் இது வேகமாக தலையில் பரவி பொடுகாக மாறுகிறது.
2. எண்ணெய் தோல்
- சிலரின் உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி மலாசீசியா செழித்து வளரும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இது ஆபத்தாக போய் முடியலாம்.
3. உலர்ந்த சருமம்
- வறண்ட சருமமும் பொடுகு பிரச்சினையை ஏற்படுத்தும். வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தலையில் தோல் உரிந்து வர ஆரம்பிக்கும். போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டால் பொடுகு தோன்றும்.
4. மருத்துவ நிலைமை
- பொடுகு என்பது வெள்ளைத் தோல் உரிதல் மற்றும் அரிப்பு மூலம் ஏற்படுகிறது. இது வறண்ட சருமம், பூஞ்சை வளர்ச்சி, முடி பராமரிப்புப் பொருட்களுக்கு உணர்திறன் மற்றும் மருத்துவ நிலைமைகளாலும் ஏற்படுகிறது. இந்த காரணங்களால் பொடுது நாளடைவில் அதிகரிக்கலாம்.
5. சுத்தம் செய்யவிட்டால் ஏற்படும்.
- அடிக்கடி தலைமுடியைக் கழுவுவதால் உச்சந்தலையில் எண்ணெய் பசை மற்றும் இறந்த சரும செல்கள் படிந்து, பொடுகுக்கு ஏற்ற நிலையை ஏற்படுத்தி விடும். எனவே தலையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
வெள்ளை எள் எண்ணெய் + வெந்தயம்
வெள்ளை எள் எண்ணெயில் 1 ஸ்பூனுடன் வெந்தயம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி எடுக்கவும். இந்த எண்ணெய்யை குளிப்பதற்கு முன்னர் தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்து விட்டு கழுவினால் தலைமுடி வலுவாகும். அதே போன்று பொடுகு தொல்லையும் குறையும்.
2. கொத்தமல்லி எண்ணெய்
கொத்தமல்லி தழையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து வெந்நீரில் வெதுவெதுப்பாக வைத்து பயன்படுத்தினால் பொடுகு பிரச்சினை குணமாகும். மல்லியில் இருக்கும் மருத்துவக்குணங்கள் தலையை குளிர்ச்சியாக்கும்.
3. நல்ல தேங்காய் எண்ணெய் + கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்தால் தலைமுடி நன்றாக வளரும். அதே சமயம் தலையில் இருக்கும் பொடுகும் குறைந்து விடும். வாரத்திற்கு 2 அல்லது 3 தடவை செய்தால் நிரந்தர தீர்வை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |