தொப்பையை சட்டுன்னு கரைக்கும் சௌசௌ காய் குழம்பு... இவ்வளவு நன்மைகள் இருக்கா?
பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்களில் எமை எடுத்தாலும் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் நிச்சயம் கொண்டிருக்கும்.
அந்தவகையில், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சௌசௌ காயை தேர்வு செய்யலாம். ஏனென்றால் கலோரிகள் மிக குறைவு தான் , நார்ச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. இது நல்ல வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால்நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் இதன் மூலம் உடல் எடையும் கணிசமாக குறையும்.

மேலும் உடலில் ரத்த உற்பத்திக்கு தேவைப்படும் இரும்பு சத்து , விட்டமின் பி2 ,விட்டமின் பி9 போன்ற சத்துக்கள் இந்தச் சத்துக்கள் சௌசௌவில் அதிகம் இருப்பதால் புதிய ரத்த உற்பத்திக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் அனிமியா வருவதையும் தடுக்கிறது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சௌசௌ காயில் அசத்தல் சுவையில், எவ்வாறு பொரிச்ச குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சௌசௌ - 2
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/2 ஸ்பூன் தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
வறுத்து அரைக்க தேவையானவை
தனியா - 2 தே.கரண்டி
சீரகம் - 1/2தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
வர மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 தே.கரண்டி
தக்காளி - 1

செய்முறை
சௌ சௌவை நன்றாகக் கழுவி, தோலை நீக்கி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் கொத்தமல்லி விதை, வரமிளகாய், சீரகம், மிளகு, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை மணம் வரும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியதும், அவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து, துருவிய தேங்காயையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய சௌ சௌ துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பின் அரைத்து வைத்துள்ள தக்காளி–தேங்காய் மசாலா விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து, உப்பைச் சரிபார்க்கவும்.

குக்கரை மூடி, மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். பிரஷர் தானாக அடங்கியதும் குக்கரைத் திறந்தால், சுவையான சௌ சௌ பொரிச்ச குழம்பு தயார். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி பரிமாறலாம்.
சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் இந்த சௌ சௌ குழம்பு பக்காவாக பொருந்தும்.
| செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |