கண் பார்வையை சீராக்கும் கேரட் கீர்... இப்படி செய்து அசத்துங்க!
ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் காய்கறிகளின் பட்டியலில், கேரட் முக்கிய இடம் வகிக்கின்றது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள கேரட்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கேரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களின் ஆரோகியத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிப்பதுடன், சருமத்தை பளப்பளப்பாக மாற்றுவதிலும் இளமையை நீடிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

தோலில் சிராய்ப்பு காயம், அரிப்பு இருந்தால் கேரட்டை பசையாக்கி தடவினால் அரிப்பு, சிவப்பு தன்மை போகும். வேர்குரு மறையும். தோலில் ஏற்படும் பிரச்னைக்கு மேல்பூச்சு மருந்தாகவும் புண்களை ஆற்றும் வல்லமை உடையதாகவும் கேரட் திகழ்கின்றது.
கேரட் நோய்கிருமிகளை அழித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் வீக்கம், வலியையும் குறைக்கும் தன்மை கொண்டது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கேரட்டை பயன்படுத்தி கோடைகாலத்துக்கு இதமாகவும், சுவையாகவும் எவ்வாறு கேரட் கீர் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரட் -2
சர்க்கரை - 1கப்
பால்- 1 டம்ளர்
பாதாம் மற்றும் முந்திரி - தேவையான அளவு
நெய்- 2 மேசைக்கரண்டி

செய்முறை
முதலில் கேரட்டை பெரிய துண்டுகளாக நறுக்கி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து வேகவைத்த கேரட்டை சிறிது நேரம் ஆறவிட்டு, அதனை ஒரு மிக்ஜி ஜாருக்கு மாற்றி, நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த கேரட் மற்றும் பால் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறுதியாக பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில்,ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கேரட் கீர் தயார்.
3 தொடக்கம் 4 மணிநேரம் குளிரூட்டியில் வைத்து பரிமாறினால், அட்டகாசமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |