சூடான தந்தூரி சிக்கன் பிரியாணி! மிக இலகுவான செய்முறையுடன்
பொதுவாக பிரியாணி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும்.
அந்த வகையில் மதிய உணவிற்கு சூப்பரான தந்தூரி சிக்கன் பிரியாணி எவ்வாறு செய்வது தொடர்பில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தயிர் - ஒரு கப்
- பூண்டு - ஒன்று
- இஞ்சி - ஒரு துண்டு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை - சிறிது
- பச்சைமிளகாய் - 2
- லவங்கம் - 4
- எலுமிச்சை - பாதி
- மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
- சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
- கஸ்தூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
முக்கிய பொருட்கள்
- அரிசி - அரை கிலோ
- சிக்கன் லெக்பீஸ் - 6
- வெங்காயம் - 3
- தக்காளி - 3
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
- புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பிரியாணியின் தாளிப்புப் பொருட்கள்
- பட்டை
- பிரிஞ்சு இலை
- இலவங்கம்
- ஏலக்காய்
- அன்னாசிப்பூ - தலா2
தயாரிப்பு முறை
முதலில் பிரியாணிக்கு தேவையான சிக்கன், காய்கறிகள், பாத்திரங்கள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டிய சில பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைத்து, சிறிது நேரத்திற்கு பிறகு பொரித்தெடுத்து கொள்ளுங்கள்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தாளிப்புக்குரிய பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் சிறிதளவு வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதங்கவிடுங்கள்.
பொன்னிறமாக வந்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை ஆகிய சேர்த்து அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி நன்றாக கொதிக்க விடுங்கள்.
நன்றாக அரிசியில் வந்த பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி அடுப்பின் வேகத்தை சற்றுக் குறைத்து வேக விடுங்கள்.
இதனை தொடர்ந்து அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்!