பேய் பிடித்த அனுபவத்தை மேடையில் பகிர்ந்த பெண்! அச்சத்தில் உறைந்த அரங்கம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில், எனக்கு பேய் பிடித்த அனுபவம் இருக்கு என சொல்பவர்கள் VS நம்பாதவர்கள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான மற்றும் திகிலூட்டும் விடயங்கள் குறித்து சென்ற வாரம் கலந்துரையாடப்பட்து.
அதில் பங்கேற்ற ஒரு பெண் தனக்கு பேய் பிடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்ட மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது. அதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வேளை பேய் உண்மையிலேயே இருக்குமோ? என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கிவருகின்றார். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அந்தவகையில், கடநத வார நிகழ்ச்சியில் எனக்கு பேய் பிடித்த அனுபவம் இருக்கு என சொல்பவர்கள் VS நம்பாதவர்கள் என்ற தலைப்பில் சுவாரஸ்யமான மற்றும் திகிலூட்டும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்து.
அதில் பங்கேற்ற பெண்ணொருவர், பேய் தன்னை கொடூரமான தாக்கியது குறித்து பகிர்ந்துள்ள, பீதியை கிளப்பும் காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |