அரங்கத்தை மிரள விட்ட இளைஞரின் அசாத்திய திறமை.. ட்ரெண்டிங் பாடலா இது?
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தன்னிடம் உள்ள அசாத்திய திறமையால் அரங்கத்தை மிரள விட்ட இளைஞரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழா தமிழா
தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு தொலைக்காட்சியிலும் விவாத நிகழ்ச்சியாக தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
அசாத்திய திறமையை வெளிகாட்டிய தருணம்
இந்த நிலையில், நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தன்னுடைய அசாத்திய திறமையை வெளிகாட்டியுள்ளார்.
அதாவது தற்போது ட்ரெண்ங்கில் இருக்கும் “பூட்டி வச்ச குதிரை ஒன்று புட்டுகிச்சு மாமா..” என்ற பாடலை இளைஞர் ஒருவர் நிகழ்ச்சியில் பெண் குரலில் பாடியுள்ளார்.

அவர் குரலில் அந்த பாடலை கேட்கும் பொழுது அது இளைஞரின் குரல் என்பது தெரியவில்லை. அச்சு அசல் பெண்ணொருவர் அந்த பாடலை பாடியிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |