Tamizha Tamizha: வெறும் 100 ரூபாயால் பறந்து போன பயம்! சிரிப்பை அடக்கமுடியாமல் தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் விதவிதமான பயங்கள் கொண்டவர்கள் மற்றும் எதற்கும் துணிந்தவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் விதவிதமான பயங்கள் கொண்டவர்கள் மற்றும் எதற்கும் துணிந்தவர்கள் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
நபர் ஒருவர் தனக்குள் இருந்த மூன்று விதமான பயத்தைக் குறித்து பேசியுள்ளார். அதாவது எலி கடித்த ஆடைகளைப் பார்த்தால் தனக்கு அதிக பயம் ஏற்படும் என்றும் தலைதெறிக்க ஓடிவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இரண்டாவதாக தண்ணீருக்குள் இருப்பது மிகவும் பயம் என்றும், தீம் பார்க் ஒன்றிற்கு சென்று தன்னை யாரும் கிண்டல் செய்யக்கூடாது என்பதால் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மூன்றாவதாக இருட்டு என்றால் பயம். அதனால் பகலிலும் லைட்டை போட்டுக்கொண்டிருப்பேன், ஆனால் வீட்டு ஓனர் 100 ரூபாய் கரண்ட் பில் அதிகப்படுத்தியதால், அந்த பயத்திலிருந்து வெளியே வந்தேன் என்று கூறியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |