நா மனைவியை நேசிக்கவே இல்ல.. குழந்தை பிறந்த பின் சொன்ன கணவர்- கடுப்பான ஆவுடையப்பன்
“நா மனைவியை நேசிக்கவே இல்ல..” என தமிழா தமிழாவில் கணவர் மனைவி முன்னாள் கூறியது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தமிழா தமிழா
தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதே போன்று மற்றொரு தொலைக்காட்சியிலும் விவாத நிகழ்ச்சியாக தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்ச்சியை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
காதல் இல்லாமல் குழந்தையா?
இந்த நிலையில், கணவன்- மனைவி காதல் வாழ்க்கை எப்படி உள்ளது? என்பதனை கருவாகக் கொண்டு கடந்த வாரங்களில் ஒரு வாதம் நடந்து முடிந்துள்ளது.
அதில், பேசிய கணவர் ஒருவர்,“ என்னுடைய மனைவி மீது எனக்கு துளியளவும் காதல் இல்லை.. என்னுடைய வீட்டில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் நிகழ்ந்தது. இதனால் எனக்கு காதலிக்க மனம் இல்லை..” என கூறினார்.
அதற்கு மனைவி, “இவர் இப்படி கூறுவது கஷ்டமாக இருக்கிறது..” என பதில் கூறியுள்ளார்.
மனைவியின் நிலையை அறிந்த ஆவுடையப்பன், “ உங்கள் மனைவி மீது காதல் இல்லாமல் எப்படி ஒரு வயதில் பிள்ளை இருக்கிறது. இப்படியெல்லாம் பேசாதீங்க..மனைவிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். இது நிகழ்ச்சி என்பதால் நான் பொறுமையாக இருக்கிறேன்..” என பேசியுள்ளார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
