Tamizha Tamizha: அம்மாவிற்கு காதல் ப்ரொப்போஸ் செய்த மகன்! அரங்கத்தில் சிந்திய கண்ணீர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட மகன்கள் மற்றும் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
ததற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
கடந்தத வாரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மகன்கள் மற்றும் அம்மாக்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் காதல் திருமணத்திற்கு பின்பு மகன் மாறிவிட்டதாக அரங்கத்தில் அம்மாக்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர்.
இளைஞர் ஒருவர் தனது தாயிற்கு பிடித்த சாக்லேட்டைக் கொடுத்து காதல் ப்ரொப்போஸ் செய்துள்ளார். இதில் ஒட்டுமொத்த அரங்கமே கண்கலங்கியுள்ளதுடன், குறித்த அம்மா தனது அழுகையை அடக்கமுடியாமல் கண்ணீர் சிந்தியுள்ளார்.
மகனும் ஒரு கட்டத்தில் அம்மாவின் பாசத்தையும், கண்ணீரையும் பார்த்து கண்கலங்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |