பிரசவத்திற்கு பின் எடை குறைப்பு சரியானதா? தவறானதா? உண்மையை உடைத்து பேசிய நடிகைகள்!
பிரசவத்திற்கு பின்னர் எடை குறைப்பது சரியானதாக தவறான என ரிவி நிகழ்ச்சி சின்னத்திரை நடிகைகள் உடைத்து பேசியுள்ளார்கள்.
தமிழா தமிழா
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பரபரப்பாகிய ஓடிய நிகழ்ச்சி தான் “தமிழா தமிழா”.
இந்த ஷோவில் விவாதிக்கப்படும் விடயங்கள் அனைத்தும் இன்றைய சமூகத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
நீயா நானா நிகழ்ச்சி போல் இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு தனி ரசிக பட்டாளமே இருக்கின்றது.
இரண்டு அணிகளாக பிரிந்து சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகள் இங்கு ரியலாக பேசப்படும்.
எடை குறைப்பு வாதம்
இந்த நிலையில் இந்த வாரம் பிரசவத்திற்கு பின்னர் நடிகைகள் எடையை குறைப்பது குறித்து வாதிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு நடிகை, “ பிரசவத்தின் போது நான் 95 கிலோகிராம் எடை போட்டு விட்டேன். இதனால் என்னால் குழந்தைக்கு விரைவாக எழுந்து பால் கொடுக்கக் கூட முடியாது. ” என வறுத்தமாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பாரதி கண்ணம்மா பரீனா, “ எடை குறைப்பு முயற்சி என்பது தினமும் நாம் செய்யும் கடன்கள் போன்றது..” என ஆழமாக வாதிட்டுள்ளார்.
இவர்களின் வாதங்களை பார்த்து அரங்கமே ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பரீனாவின் வாதம் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |