Tamizha Tamizha: நம்ம மேல பாசம் இருந்தால் பண்ணனும்ல... தொகுப்பாளரிடம் எகிறிய பெண்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் Mood Swing ஆகும் மனைவிகள் மற்றும் அதனால் Mood Out ஆகும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் Mood Swing ஆகும் மனைவிகள் மற்றும் அதனால் Mood Out ஆகும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் மனைவிகள் Mood Swing-ல் இருக்கும் போது பாத்திரம் பயங்கரமாக உடைவதாகவும், இது வருடத்தில் 365 நாட்களும் நடப்பதாக கூறியுள்ளார்.
மற்றொருவரின் மனைவி கணவரின் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுவிடுவாராம். வேறு யாரு போனிலிருந்தாவது தன்னை அழைத்து பேச வேண்டும் என்று கூறுகின்றார்.
தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நம்ம மேல பாசம் இருந்தால் பண்ணனும்ல என்று கூறி வாயடைக்க வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |