சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஜோடி தான் காதலை அறிவித்த நடிகர்கள்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த மெளன ராகம் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்த சல்மானுல் தனது காதலை சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சீரியல் நடிகர்கள்
தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகை நடிகர்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் பார்த்தால்
மெட்டி ஒலி நாடகத்தில் நடித்த சேத்தன் - தேவதர்ஷினி, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில் ஸ்ரீஜா, ராஜா ராணி சீரியலில் நடித்த ஆல்யா மானசா - சஞ்சீவ், திருமணம் சீரியலில் நடித்த சித்து - ஸ்ரேயா, போன்றோர் சீரியலில் காதலித்து நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டவர்களாவர்.
இந்த வரிசையில் இப்போது சல்மானுல் மேகா மகேஷ் ஜோடி இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மலையாளத்தில் ஒளிபரப்பான மிழி ரண்டிலும் என்கிற தொடரில் ஜோடியாக நடித்திருந்தனர்.
அந்த சீரியலில் நடித்தபோது சல்மானுல் உடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளது.
தங்கள் நடிப்பில் எந்த அளவிற்கு பிஸியாக இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரின் காதலை அதிகாரப்பூர்வமாக சல்மானுல் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பது எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, அக்கறை, ஏற்ற இறக்கங்கள், துன்பங்கள், பயணங்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம்.
எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |