Inners கூட வாங்கவே மாட்டாரு சார்... அது உள்ளே போடுறது தானே சார்! திக்கு முக்காடிய தொகுப்பாளர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சிக்கனமாக இருக்கும் கணவன் அவர்களிடம் சிக்கித் தவிக்கும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதோ போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை அறிவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் சிக்கனமாக இருக்கும் கணவன் அவர்களிடம் சிக்கித் தவிக்கும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் சிக்கனமாக இருக்கும் கணவர்களின் முகத்திரை சரமாரியாக கிழிந்துள்ளது. ஒருவர் குழந்தை தூங்கும் போது ஃபேனை ஆப் செய்துவிட்டு செல்கின்றார்.
ஒருவர் சூடம் வாங்குவதில் கூட சிக்கனம்... மற்றொருவர் குழந்தைக்கு ஃபிரிட்ஜை ஏசியாக மாற்றியுள்ளார். இதற்கு எல்லாம் ஒருபடி மேலே சென்ற நபர் ஒருவர் உள்ளாடைகள் வாங்குவதை தவிர்த்துள்ளார்.
மனைவி இதனை அரங்கத்தில் கூறவே தொகுப்பாளர் வாயடைத்துப் போயுள்ளார். இன்று பெரும்பாலான நபர்கள் உள்ளாடைகள் கிழிந்தாலும் அதனை உள்ளே போடுவது தானே என்று அசால்ட்டாக மாற்றாமல் இருந்து வருகின்றனர்.
ஆனால் நாம் வெளியே அணியும் ஆடைகளை விட உள்ளாடைகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பலரும் யோசிக்காமல் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |