Tamizha Tamizha: விரலைக் காட்டி பெண் உடைத்த உண்மை! தொகுப்பாளரின் அசத்தல் ரியாக்ஷன்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தங்க நகைகள் மீது அதிக மோகம் கொண்ட அம்மாக்கள் மற்றும் ஆர்வம் இல்லாத மகள்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் தங்க நகைகள் மீது அதிக மோகம் கொண்ட அம்மாக்கள் மற்றும் ஆர்வம் இல்லாத மகள்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
உண்மையிலேயே தங்க நகைகளை விரும்பி அணிபவர்கள், பெரும்பாலும் சக மனிதர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்றே நினைப்பார்கள்.
அதிலும் பெண் ஒருவர் தனது விரல்களைக் காட்டி உடைத்த உண்மை தொகுப்பாளரை சிரிப்பை அடக்கமுடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும் நாட்டையே காப்பாற்றிய தங்கம், பெண்களின் சுயமரியாதையை காப்பாற்றுவதாக தொகுப்பாளர் கூறியுள்ளார். அழகுக்காக அல்ல... இக்கட்டான சூழ்நிலையில் நம்மை அதிலிருந்து மீட்பது தங்கம் தான் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
