Tamizha Tamizha: அக்காவின் கண்ணீரை அலட்சியப்படுத்திய தம்பி... கோபத்தில் கொந்தளித்த நடுவர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் தனி ஆளாக குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
இன்று பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏனெனில் இதில் எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும் தலைப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருந்து வருகின்றது.
அதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியினை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் தனி ஆளாக குடும்பத்திற்காக உழைக்கும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
குடும்பத்திற்காக பெண் பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே வேலைக்கு சென்றதும், அங்கு அவர்கள் பட்ட துயரத்தையும், கஷ்டத்தையும் கண்ணீருடன் எடுத்து வைக்கின்றனர்.
இதில் இளைஞர் ஒருவரின் அக்கா 8 வயதிலிருந்து வேலைக்கு சென்று கஷ்டப்படும் நிலையில், தான் வேலை செய்யாமல் இருந்து வருவதாக நடுவரிடம் கூறியுள்ளார்.
இளைஞர் சற்று தோரணையுடன் இதனை கூறிய நிலையில், நடுவர் கோபத்தில் கொந்தளித்து சரமாரியாக இளைஞரைப் பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |