Tamizha Tamizha: அவநம்பிக்கை உருவாக்க அப்படி பண்ணாதீங்க... அரங்கத்தில் பெண்ணை எச்சரித்த தொகுப்பாளர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் குறைந்த சம்பளத்தில் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியுமா? என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் குறைந்த சம்பளத்தில் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியுமா? என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை மகிழ்ச்சியாக கொண்டு செல்லும் பெண்கள் தங்களது அனுபவத்தை கூறியுள்ளனர். மேலும் குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.
மேலும் அரசு மருத்துவமனையில் சரியாக பார்ப்பதில்லை என்று புகார் அளித்த பெண்ணிற்கு சரியான பதிலை தொகுப்பாளர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |