திருடன் கெட்டப்பில் வந்த தங்கமயில் அப்பா- பாண்டியனுக்கு தெரிய வருமா?
திருடன் கெட்டப்பில் வந்த தங்கமயிலின் அப்பாவை பாண்டியன் பார்த்தால் என்ன நடக்கப்போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்- 2
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனிடம் தங்கமயில், வேலைக்கு போகவில்லை என உறுதியாக சொல்லி விடுகிறார்.
இருந்தாலும் மனைவி சொல்ல வருவதை கேட்காமல் தங்கமயிலை அவரும் வேலைக்கு போக கூறுகிறார். இதனால் தங்கமயில் கடந்த சில நாட்களாக மிகுந்த வருத்தில் இருக்கிறார்.
இவற்றையெல்லாம் கவனித்த மீனாவுக்கும், ராஜிவுக்கும் தங்கமயில் மீது சந்தேகம் வந்துள்ளது. இது குறித்து தங்கமயிலிடம் கேட்கும் பொழுது தங்கமயிலும் உண்மையை சொல்ல பார்த்தார்.
உடனே கோமதி வந்தவுடன் அவர் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் அரசி வருவதை பார்த்த சக்தி, அவரை கரெக்ட் பண்ண தன்னுடைய நண்பர்களை வைத்து திட்டம் போடுகிறார். அவர்களும் அரசியிடம் வம்பு இழுத்து இருந்தார்கள்.
அப்போது பழனி, செந்தில் இருவருமே அந்த நபர்களை அடித்து துரத்தி விட்டு அரசியை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.
பதுங்கி வரும் தங்கமயில் அப்பா
இந்த நிலையில், ராஜி- கதிர் இருவரும் கோல் செய்து அக்கறையுடன் பேசுக் கொள்கிறார்கள்.
இதனை தொடர்ந்து தங்கமயிலுக்கு கோல் செய்து அவருடைய அப்பா, “கதவை திறந்து வை, நான் வீட்டுக்குள் வருகிறேன்...” என கூறுகிறார்.
தங்கமயிலும் அப்பாவின் வருகைக்காக பயத்தில் கதவை திறந்து வைக்கிறார். அப்போது தங்கமயில், “நான் பொய் சொன்னேன்” என்ற பழியை ஏற்றுகொள்கிறேன், “ திருட்டுபழி வேண்டாம். நீங்கள் கிளம்பி விடுங்கள்..” என்று கூறுகிறார்.
அதற்கு அவருடைய அப்பா, “நான் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன்..” என்கிறார். இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் அப்பா வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி வர, அந்த சமயத்தில் பழனி எழுகிறார்.
இப்படியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |