பள்ளிக்கு செல்லாத மாணவர்களை அழைத்து சென்று தேர்வு எழுத வைத்த போலீஸ்!
பள்ளிக்கு செல்லாத மாணவர்களை அழைத்து சென்று தேர்வு எழுத வைத்த போலீஸுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
தேர்வு எழுத வைத்த போலீஸ்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திருவள்ளூர், பென்னாலூர்பேட்டையில் உதவி காவல் ஆய்வாளர் பரமசிவம் என்பவர், பள்ளிக்கு செல்லாத மாணவர்களை அழைத்து சென்று தேர்வு எழுத வைத்துள்ளார்.
மாணவர்கள் தேர்வுக்கு வராமல் வீட்டில் இருப்பதாக ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, 11 மாணவர்களை பள்ளிக்கு அழைத்த சென்று தேர்வு எழுத வைத்துள்ளார் பரமசிவம்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து காவல் ஆய்வாளரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் உதவி ஆய்வாளர் பரமசிவத்தின் விழிப்புணர்வு வீடியோ #Tamilnadu | #Thiruvallur | #TNPolice | #Schools pic.twitter.com/yyK8d9kYR9
— Minnambalam (@minnambalamnews) April 17, 2023