வியட்நாம் பெண்ணிற்கு தமிழக இளைஞர் மீது ஏற்பட்ட காதல்! கடல் கடந்து அரங்கேறிய திருமணம்
வியட்நாம் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழக இளைஞருக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடல் கடந்து துளிர்ந்த காதல்
சமீப காலமாக கடல் கடந்து ஏற்படும் காதலையும், அவர்கள் தமிழ் கலாச்சாரத்தின் படி திருமணம் செய்து கொள்ளும் புகைப்படங்கள் அதிகமாகவே வருகின்றது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தாமஸ் பிரபு. மெக்கானிக் இன்ஜியரிங்கு படித்துமுடித்த இவர் ஜப்பானில் கடந்த 9 வருடமாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடன் வேலை செய்த பா பா ஃம் துய் ட்சுக் வான் எனும் பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்பு இவர்களின் நட்பு காதலாக மாறிய நிலையில், இரு வீட்டினரும் இவர்களின் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 12ம் தேதி இவர்களின் திருமணம் ஜப்பானில் கிறிஸ்தவ முறைப்படி நடந்துள்ளது.
பின்பு இவர்களின் திருமண வரவேற்பு தாமஸின் ஊரான கூடங்குளத்தில் நடந்துள்ளது. கடல் கடந்து காதலித்து கரம்பிடித்த தம்பதிகளின் புகைப்படத்தை அவதானித்த நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.