கொரோனா 4வது அலை அச்சம்.. தமிழக அரசு முக்கிய நடவடிக்கை என்ன?
கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் 4 வது அலை பரவக்கூடிய நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதன்படி, தமிழக அரசின் நடவடிக்கைகளை குறித்து, கூறியதாவது, தமிழ் நாடு அரசு சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் சிறப்பு மருத்துவமனை உருவாக்குவது வரவேற்புக்கு உரியது.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன் படி ஐரோப்பிய நாடுகள் தென் கொரியா, ஹாங்காங், சீனா போன்ற நாடுகளிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதனால், கொரோனா பரவல் குறித்து அலட்சியம் காட்டக் கூடாது என உலக நல நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் கொரோனா நான்காவது அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.
அனைவரும் முகக் கவசம் அணிவதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.