தமிழ் புத்தாண்டு 2025: கனி காணும் நேரம், குலதெய்வ பூஜை செய்யவேண்டிய நேரம்
உலகத் தமிழர்களின் முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றான தமிழ் வருடப்பிறப்பு/தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல மலேசியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் புத்தாண்டு 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருகின்றோம். இந்த நாளில் ஆதி கடவுளான சிவனையும், உங்கள் குலதெய்வத்தையும் தவறாமல் வழிபட வேண்டும்.
அந்த வகையில் புது வருடம் பிறக்கும் நாளில் கனி காணுதல் எப்போது செய்ய வேண்டும்? புதுவருடம் பிறக்கும் நேரம் பற்றிய விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.
விசுவாவசு தமிழ் வருடப்பிறப்பு
கனி காணுதல் பிறக்கும் விசுவாவசு தமிழ் புத்தாண்டையொட்டி 13ஆம் தேதி வீட்டை சுத்தப்படுத்த வேண்டும். வழக்கமாக 14ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் தான் கனி காணுவார்கள். “ கனி காணுதல்” என்பது காலையில் கண் விழித்தவுடன் மங்களகரமான விஷயங்களை பார்க்க வேண்டும்.
மனதிற்கு அமைதியாக இதமாக தமிழ் புத்தாண்டை தொடங்குவது அவசியம். முதல் நாளே தாம்பாளத்தில் கனி காணுவதற்காக முக் கனிகளை தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.
அதனுடன் கொன்றை பூ அல்லது மஞ்சள் நிறத்திலான பூக்களை வாங்கி, தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, எலுமிச்சையுடன் வைக்கவும். அந்த தட்டில் சிறிய கண்ணாடி, நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள், நகைகள் வைத்து தனியாக எடுத்து வைத்து விட்டு, காலையில் எழுந்தவுடன் அந்த தட்டில் கண் விழிக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள் கண்விழித்து கனி கண்ட பிறகு தாம்பளத்தை பூஜை அறையில் வைத்து, தாம்பாளத்தில் கண்ணாடியை பார்க்கும் போது இந்த ஆண்டு சிறப்பாக அமைந்திட ஆதி சிவனையும், குல தெய்வத்திடமும் வேண்டிக் கொள்ள வேண்டும்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி- 7.20 மணி வரை தான். இந்த நேரத்தை தவறவிட்டால் காலை 9.10 மணி நிமிடம் - 10.20 மணி வரை வழிபடலாம்.
இலை போட்டு வழிபடும் நேரம்
மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை வழிபடலாம். விசுவாவசு வருடம் சூரிய ஆதிக்கத்தில் இருப்பதால் சிவதலங்களுக்கு செல்வது சிறப்பு. இலையில் அறுசுவை உணவுகள் நிறைந்திருக்க வேண்டும்.
நெய் வேத்தியமாக பால் சார்ந்த இனிப்புகளை வைத்து படைக்கவும். ஒரு வருடம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பது இயற்கை நீதி. எனவே சாதம், புளிக்குழம்பு, சாம்பார், வேப்பம் பூ ரசம், மாங்காய் பச்சடி போன்ற அறுசுவை உணவுகளை வைத்திருக்க வேண்டும்.
காலையில் 5.30 மணிக்கு எழுந்துவிட்டு 5.45 மணி முதல் 6 மணிக்கு உள்ளாக சூரிய வணக்கம் செய்ய வேண்டும். தமிழ் புத்தாண்டில் சீரான உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்திட தெய்வங்களை வழிபட்டு கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |