புதுவருடத்தில் வீட்டில் செல்வம் வற்றாமல் இருக்க வேண்டுமா? இந்த பொருட்களை கட்டாயம் வாங்குங்க
நாளை புத்தாண்டு தினமான சித்திரை 1ம் தேதி நாம் கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் புத்தாண்டு 2023
நாளை வெள்ளிக்கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் தமிழ் வருடமான சோபகிருது பிறக்கிறது. ஒவ்வொரு மாத பிறப்பிலும் ஒவ்வொரு பொருளை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் அந்த பொருள் பெருகிக் கொண்டே வரும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை .
அந்த விடயம் தமிழ் புத்தாண்டுக்கும் பொருந்தும். ஆம் தமிழ் புத்தாண்டின் போது நீங்கள் வாங்கும் பொருட்கள், அந்த வருடம் முழுவதும் நீங்காத செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
சுக்கிர ஹோரை நேரம்
நாளை புத்தாண்டு தினமான வெள்ளிகிழமையில் சுக்கிர ஹோரை நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 முதல் இரண்டு மணி வரை, இரவு 8 முதல் 9 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் சில பொருட்களை வாங்கி பூஜை செய்தால் வீடு செழிப்பாக இருக்கும்.
நாளை கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள்
பால் அல்லது பால் சார்ந்த பொருட்களான நெய், வெண்ணை, தயிர் போன்ற பொருட்கள் ஆகும். இதில் ஏதேனும் ஒரு பொருளை சுக்கிர ஹோரை நேரத்தில் வாங்கி பூஜை செய்ய வேண்டும்.
இதே போன்று கல் உப்பு மஹாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுவதால், உப்பை வாங்கி வைக்கலாம். இவை பணவரவை மட்டுமின்றி, வீட்டின் எதிர்மறை ஆற்றலையும் விரட்டுகின்றது.
வெள்ளிக்கிழமைகளில் ஊறுகாய் வாங்குவது மிகவும் சிறப்பாகும். அதிலும் நாளைய தினம் ஊறுகாய் வாங்கினால் மிகவும் அதிர்ஷ்டமாம்.
அஷ்ட மங்களப் பொருட்களில் ஒன்றான கண்ணாடியை வாங்குவது மிகவும் சிறப்பாகும். கண்ணாடியும் மஹாலக்ஷ்மியின் அம்சம் நிறைந்த பொருள் என்பதால் அதனை நாளைய தினமான புத்தாண்டு அன்று வாங்கி வீட்டில் பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்த வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழலாம்.