நாளை பிறக்கவுள்ள புதிய ஆண்டில் அதிஷ்டத்தின் உச்சிக்குப் போகப்போகும் 3 ராசிக்காரர்கள்!
நாளைய தினம் பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டு தினத்தில் மங்களகரமான ராஜயோகம் ஒன்று உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகம் புதாத்திய ராஜயோகம், புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் இது உருவாகிறது. கிரகங்கள் ஒவ்வொரு ராசிகளிலிருந்து மாறிக் கொண்டே இருக்கும் போது கிரகங்களின் சேர்க்கையால் சுப யோகங்களும் அசுப யோகங்களும் உருவாகிறது.
அப்படி உருவான யோகம் தான் இந்த புதாத்திய ராயோகம். மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் திணறும் அளவிற்கு செல்வம் கொட்டப் போகிறது. அந்த 3 ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
கடகராசிக்காரர்கள்
இந்த கடகராசிக்காரர்களுக்கு இந்த புதாத்திய ராஜயோகம் 10ஆவது இடத்தில் உருவாகுவதால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொழிலில் ஏற்ற இடமாற்றத்தையும் பெறுவார்கள். எதிரிகளால் வெற்றியடையவார்கள். குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நன்றாக இருக்கும். வியாபாரிகளும் வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் காண்பார்கள், தந்தையின் ஆதரவும் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
துலாராசிக்காரர்கள்
துலாராசிக்காரர்களுக்கு இந்த புதாத்திய ராஜயோகம் 7 ஆவது இடத்தில் உருவாகிறது. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலமானது சாதகமாக இருக்கும்.இவர்களுக்கு திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும், அடுத்தடுத்த வாய்ப்புகள் அதிகம் தேடி வரும், வாழ்க்கைத்துணையுடன் உறவு நன்றாக இருக்கும். திருமணமாகதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
சிம்மராசிக்காரர்களுக்கு
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் 8 ஆவது இடத்தில் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 14 முதல் அதிர்ஷ்டமானதாக இருக்கும். எடுக்கும் காரியம் எல்லாம் அதிர்ஷ்டமாக இருக்கும், வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும், மிகுதியாக இருக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாக முடியும். புதிய புதிய விடயங்களை கற்றுக்கொள்வீர்கள், தொழிலில் நல்ல இலாபம் அடைவீர்கள், அதிக பணத்தை சேமிப்பீர்கள், உங்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும்.