தமிழ்நாட்டு பிரபலமான மட்சா டீ - இதன் பக்க விளைவுகள் தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், மூலிகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
அதிலும், குறிப்பாக காலையில் நாம் குடிக்கின்ற தேநீர் பானங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சிலர் வழக்கமான டீ, காபிக்கு பதிலாக மட்சா டீ, மட்சா காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இது உடலுக்கு நல்ல நன்மைகள் தந்தாலும் இதில் ஏராளமான பக்க விளைவுகளும் உள்ளது. அந்த பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம்.

மட்சா டீ நன்மைகள்
மட்சா டீ, மட்சா காபி என்பது பச்சை நிறத்தில் இருக்கும். ஒருவித பாரம்பரய சுவையில் இருக்கும் சத்தான பானம். இதில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.
இதனாலேயே உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் இதை காலையில் குடித்து வருகின்றனர். மட்சா என்பது க்ரீன் டீ என்பதும் வேறு வேறு இல்லை.
இது இரண்டுமே ஒன்று தான். இந்த இரண்டுமே ஒரே தாவரத்தில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அதை வளர்க்கும் முறை, ப்ராசஸ் முறைகளில் வேறுபடும்.

பக்க விளைவுகள் என்ன?
ரசாயனங்கள் சேர்க்கை - முழுமையான டீ பிளாண்டை தான் மட்சா டீக்காக அறுவடை செய்வார்கள். இந்த செடி மிக கனமா உலோகங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், மண்ணில் இருந்து கிடைக்கும் ஃப்ளூரைடு ஆகிய அனைத்தையுமே உறிஞ்சியிருக்கும்.
இதன் காரணமாக மட்சா டீ பவுடரில் நிறைய ரசாயனக் கலப்பு இருக்கும் என்று ஜர்னல் ஆஃப் கன்ஸ்யூமர் புரடக்ஷகன் அண்ட் ஃபுட் சேஃப்டி என்ற இதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லீரல் - உயர்தர க்ரீன் டீயில் இருப்பதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கின்றன.
national institute of diabetes and digestive and kidney diseases என்னும் இதழில் வெளிவந்த ஒரு ஆய்வு அறிக்கையில் கேட்டசின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது தலைசுற்றல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.

ரத்த அழுத்தம் அதிகரிக்கும் - க்ரீன் டீ மற்றும் மட்சா டீ இதய ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கூறுவார்கள். ஆனால் எல்லோரது உடல் நிலையும் ஒன்றாக இருக்காது என்பதால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல் நிலையைப் பொருத்து இந்த டீ ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யுமாம்.
குறிப்பாக ஏற்கனவே ஹைபர் டென்ஷன் பிரச்சினை இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் மிதமான அளவில் மட்டுமே மட்சா டீயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜீரணக் கோளாறு - அதிக அளவில் மட்சா எடுத்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதற்கு காரணம் அதிக அளவில் பாலிபினால்கள் இருக்கின்றன.
இதன் காரணமாக குமட்டல், டயேரியா, மலக்குடல் அழற்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிகமாக இந்த டீ எடுக்கும்போது வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதோடு குடலில் இருக்கும் நுண்ணுயிரிகளை அழித்து விடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |