கொரோனா 4வது அலை தீவிரம்... மீண்டும் முழு ஊரடங்கா?
கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி இங்கிலாந்து, சீனா, ஹாங்காங் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றை ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரம் கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரொனா

அதன்படி, தமிழகத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 56 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. சென்னையில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய 30,095 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
நகை பிரியர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி - இன்றைய நிலவரம்