கதறிய மனைவி... பிரித்தானியாவில் தீயில் கருகிய இலங்கை தமிழ் குடும்பம்! கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
பிரித்தானியாவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெக்ஸ்லிஹீத்தில் உள்ள ஹாமில்டன் வீதியிலுள்ள வீட்டில் இந்த பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்கான காரணம் இன்றும் கண்டுப்பிடிக்கப்பட வில்லை.
தனது குடும்பத்தை பறி கொடுத்த கணவர் கருகிய வீட்டின் முன்பு இருந்து கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது அவரின் மனைவி அழைப்பினை ஏற்படுத்தி நெருப்பு நெருப்பு என்று கதறியதாகவும், அப்படியே அழைப்பேசி துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் மனைவியும், மாமியாரும் இலங்கை திரும்புவதற்காக தயாராகி கொண்டிருக்கும் போதே இந்த அசம்பாவீதம் நடந்துள்ளது. இதேவேளை, குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
- உங்களைச் சுற்றி தீவிபத்து ஏற்பட்டால் அல்லது தீப்பற்றிக் கொண்டால் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலைப் பயன்படுத்தி நெருப்பை அணைக்க முயலலாம்.
- தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைக்க முயற்சி செய்யக் கூடாது.
- ஏனெனில், தண்ணீர் தீக்காயத்தின் மீது பட்டு எரிச்சலையும் பாதிப்பையும் அதிகப்படுத்தும். மற்ற தீவிபத்துகளுக்குத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
- விபத்தின்போது தீப்பற்றி எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால், உடனடியாக அவரைக் கீழே தள்ளி கம்பளம், போர்வை அல்லது கோணி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அவரின்மீது இறுக்கிச் சுற்றினால் தீ பரவுவதைத் தடுக்க முடியும்.
- உடுத்தியிருக்கும் ஆடையில் தீப்பற்றிக்கொண்டால் கீழே படுத்து உருளவேண்டும். பயந்து ஓடக் கூடாது. ஓடும்போது காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாகப் பற்றி எரியும்.
- சூடான பாத்திரங்களைத் தொடுவதாலோ, கொதிக்கும் எண்ணெய் அல்லது சூடான பொருள்கள் தெறித்து விழுவதாலோ உண்டாகும் சிறு புண்கள் மற்றும் கொப்பளங்களைக் கையால் தேய்ப்பது அல்லது நகத்தால் கிள்ளுவது தவறு. அப்படிச் செய்வதால் புண் மற்றும் கொப்பளத்தின் உள்ளே கிருமிகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- அந்தக் கொப்புளங்களின்மீது 'ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாகக் கட்டுப்போட வேண்டும். அழுத்தமாகக் கட்டு போடக் கூடாது.
- தீக்காயங்களுக்குத் தேன் மிகவும் நல்ல மருந்து. சிறு சிறு தீக்காயங்களுக்குத் தேனை காயத்தின்மீது தடவலாம்.
- கடுமையான தீக்காயங்கள்மீது காற்று படாமல் மூட வேண்டும். அது வலியையும் கிருமித் தொற்றையும் குறைக்கும்.
- உடலின்மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
- தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
- தீ விபத்தினால் ஏற்படும் பாதிப்பில் உடைக்கு முக்கியப்பங்கு உண்டு. சமையல்வேலைகளில் ஈடுபடுவோர் பருத்தியால் ஆன துணிகளை அணிவது பாதுகாப்பானது.
- ஏனெனில், அது தீயினால் ஏற்படும் பாதிப்பின் அளவைக் குறைக்கும். பட்டு அல்லது நைலான் உடைகள் அணிந்திருந்தால் அது எளிதில் தீப்பற்றிக் கொள்வதோடு, அதிக பாதிப்பையும் ஏற்படுத்தும். செயற்கை இழை உடைகளிலும் எளிதில் தீப்பிடிக்கும்.
- வெப்பத்தில் உருகி உடம்போடு ஒட்டிக் கொள்ளும். தொடர்ந்து தீப்பற்ற தூண்டுதலாக அமையும். இவற்றால், எளிதில் தீயை அணைக்க முடியாத அபாயமும் உண்டாகிறது. மேலும், சிகிச்சையின்போது இது சிக்கலை ஏற்படுத்தும்.
- பல நேரங்களில் காப்பாற்றச் செல்பவர்களே தீவிபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
- முன்புறத்தில் பாதுகாப்பாக சாக்கு அல்லது கம்பளி போன்றவற்றை நன்றாக விரித்துப் பிடித்தபடி பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும். இவை எதுவுமே இல்லாதபட்சத்தில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கலாம்.
- சாதாரணமாக வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் நீர் அல்லது எண்ணெய் கைதவறி உடம்பில் தெளித்துவிட வாய்ப்பு உண்டு.
- இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான நேரங்களில், பாதிக்கப்பட்ட இடங்களில் பேனா மையைக் கொட்டுவது, காபி பொடியை வைத்து அழுத்துவது, களிம்பு மருந்துகளைப் பூசுவது தவறு.
- ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்ற பொருள்களுக்குப் புண்களை ஆற்றக்கூடிய மருத்துவக் குணங்கள் எதுவும் இல்லை.
- ஆகையால், இவற்றைத் தீப்புண்களின்மீது ஊற்றுவது நோய்த் தொற்றை அதிகரிக்கும்.
- தவிர புண்களைச் சுத்தம் செய்வதிலும் கடினத்தன்மையை ஏற்படுத்தும்.
- தீயால் ஏற்பட்ட காயங்களைக் கூர்மையானப் பொருள்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது தவறான அணுகுமுறை. இப்படிச் செய்வது நோய்த்தொற்று அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
- சிறிய அளவில் தீக்காயம் இருந்தால், காயமான பகுதியில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம், குளிர்ந்த நீரால் காயத்தை நனைக்கலாம்.
- தீக்காயத்துக்கு சோப் பயன்படுத்தக் கூடாது.
- இது வலியையும் எரிச்சலையும் அதிகரிக்கும்.
- சிறிதுநேரம் கழித்து 'சில்வரெக்ஸ் ஆயின்மென்ட்' (Silverex Ointment) தடவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்.
- காயம் சிறியதாக இருந்தால், `டிடி' எனப்படும் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
- ஒருவர் தீக்காயம் அடையும்போது, அவரின் உடலிலிருந்து தண்ணீர், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருள்கள் வெளியேறிவிடும்.
- ஆகையால், காயம் அடைந்தவருக்கு அடிக்கடி உப்பு, சமையல் சோடா கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுக்கலாம். வாந்தி எடுத்தால் குடிக்கக் கொடுக்கக் கூடாது.