தனுஷின் இந்த மாற்றத்திற்கு கமல்தான் காரணமாம் - வெளியான தகவல் - வியந்துபோன ரசிகர்கள்
தனுஷின் இந்த மாற்றத்திற்கு கமல்தான் காரணம் என்று சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பிரிவுகளில் பணியாற்றி புகழ் பெற்றுள்ளார். தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
மாற்றத்தை ஏற்படுத்திய கமல்
தற்போது, நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் இப்படி பல மொழிகளில் மாஸ் காட்டி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்தானாம்.
தனுஷ் ரஜினி ரசிகராக இருந்தாலும் கமல் படத்தை ஒன்று விடாமல் ரசித்து பார்ப்பாராம். அவர் நடிக்கும் படங்கள் மூலம் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வாராம்.
கமல் நடிப்பில் வெளியான ‘குறுதிப்புனல்’ படத்தைப் பார்த்துதான் தந்தை கஸ்தூரி ராஜா, தன் மகனுக்கு தனுஷ் என்று பெயர் வைத்தாராம். இப்படித்தான் கமலின் படங்கள் தனுஷ் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.